ஜி.ஐ குழாய் கொள்வனவு விவகாரம்: கெஹலியவின் கருத்துக்களை நிராகரித்த நீதிமன்றம்
ஜி.ஐ குழாய் கொள்வனவு விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் இடமபெற்ற (12.03.2024) இந்த வழக்கு விசாரணையை மீண்டும் ஏப்ரல் 4ஆம் திகதி அன்று முன்னெடுப்பதற்கு நீதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கொள்வனவு
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, வெகுஜன ஊடக அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 9லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி குழாய்களை கொள்வனவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
எனினும், முன்னாள் சுகாதார அமைச்சர், வழக்கின் பராமரிப்பை சவால் செய்யும் பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பியிருந்த நிலையில் அவை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri