பதுளை நோக்கி சென்ற தொடருந்து தடம் புரள்வு: சேவைகள் பாதிப்பு
கொழும்பிலிருந்து(Colombo) பதுளை(Badulla) நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம், பதுளை - கொழும்பு பிரதான மார்க்கத்தில் ஹட்டன் - சிங்கமலை சுரங்க வழி பாதைக்கு அண்மையில் நேற்று(03.06.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தாமதமான தொடருந்து சேவைகள்
கொழும்பிலிருந்து நேற்று (03) காலை 9.45 மணியளவில் பதுளை நோக்கி புறப்பட்ட தொடருந்தே இவ்வாறு தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளது.
@tamilwinnews பதுளை நோக்கி சென்ற புகையிரதம் தடம் புரள்வு மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு. கொழும்பிலிருந்து(Colombo) பதுளை(Badulla) நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவம், பதுளை - கொழும்பு பிரதான மார்க்கத்தில் ஹட்டன் - சிங்கமலை சுரங்க வழி பாதைக்கு அண்மையில் நேற்று(03.06.2024) மாலை இடம்பெற்றுள்ளது. #Hatton #Lankasrinews #TAmilwinnews #Srilanka #Train ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
குறித்த தொடருந்தின் கடைசி பெட்டியான காட்சி கூட பெட்டி தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளன.
இதனால் தொடருந்து பயணிகள் எவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தொடருந்து பாதை மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தடம் புரள்வுக்கு உள்ளான பெட்டியினை கழற்றிவிட்டு தொடருந்து கொட்டகலை தொடருந்து நிலையத்தினை சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், பதுளையிலிருந்து வரும் தொடருந்துகள் கொட்டகலை வரையும் கொழும்பிலிருந்து வரும் தொடருந்துகள் ஹட்டன் தொடருந்து நிலையங்கள் வரையும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சேதமடைந்த தொடருந்து பாதையை சீர் செய்த பின் வழமை போல் தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தொடருந்துகளில் வருகை தந்த பயணிகள் அசௌகரிங்களை குறைப்பதற்காக பேருந்துகள் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |