கொழும்பு துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட விபத்து - நபர் ஒருவர் பலி
கொழும்பு துறைமுக வளாகத்தில், கனரக Forklift ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துறைமுக வளாகத்தின் 3 ஆம் கட்டத்திலிருந்து 2 ஆம் கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த கனரக Forklift முன்னால் அதே திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ரிதீகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராகும். விபத்துடன் தொடர்புடைய கனரக Forkliftஇன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கடலோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam