தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம்

Sri Lanka Police Colombo Galle Gun Shooting
By Dhayani Mar 13, 2024 02:43 AM GMT
Report

அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு வாடகை கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு : வெளியான தகவல்

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு : வெளியான தகவல்


இந்த இரண்டு தாக்குதல்களும் T-56 ஆயுதத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டதுடன், இரண்டு தாக்குதல்களிலும் ஒரே கொலையாளிகள் ஈடுபட்டுள்ளதாக சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

இந்த தாக்குதலின் பின்னர், வாடகைக் கொலையாளிகள் 25 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து அம்பலாங்கொட பிரதேசத்திற்கு வந்து, இரவு 9.30 மணியளவில் தமது இரண்டாவது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்


வெளியான காரணம்

எவ்வாறாயினும், இரவு வேளைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால், சிசிடிவி காணொளி காட்சிகளும் தெளிவாக தெரியவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வரும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் போதைப்பொருள் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

மேலும், பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், நபர் ஒருவரை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் 4 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 6 பேர் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிடிகல - குருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

பொலிஸார் விசாரணை

இந்த நிலையில் அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்திருந்ததுடன்,  அவர் வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த ஒருவரென தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஊழியரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரின் 21 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு

யாழில் கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US