கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : தொலைபேசி தொடர்புகள் மூலம் சிக்கிய சந்தேகநபர்
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசிகள் பறிமுதல்
தொலைபேசி தொடர்புகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபரிடம் இருந்து இரண்டு கைத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 17ஆம் திகதி குறித்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டிற்கு உதவியதாக தெரிவித்து இதற்கு முன்னர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
