100 கோடி ரூபாய் பரிவர்த்தனைகளை பெற்ற கொழும்பு இரத்தினக்கல் கண்காட்சி
கொழும்பு (Colombo) இரத்தினகற்கள் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினகற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சி வார இறுதி நாட்களில் கொழும்பு - உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
மதிப்பு 2.5 கோடி ரூபா
இதன்போது, குறித்த கண்காட்சியில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அதிகளவில் பங்குபற்றினர்.
இதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொள்வனவாளர்கள் கலந்து கொண்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த கண்காட்சியின் போது, 20 கரட் நீல இரத்தினம் (Blue Sapphire) அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்படப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |