கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை செல்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் நெரிசல் மற்றும் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்கு வருவோர் பெரும்பாலானோர் வயதான குடிமக்கள், அவர்கள் தவறான நிர்வாகத்தால் அடக்குமுறையான சூழ்நிலையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
மொனராகலை, வவுனியா, பதுளை மற்றும் தங்காலை போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

அதிகரிக்கும் நோயாளர்கள்
வைத்திய நிபுணர்களின் அறைகளுக்கு அருகிலுள்ள காத்திருப்பு பகுதிகளில் சுமார் 50 பேருக்கு இருக்கைகள் இருந்தாலும், சுமார் 150 நோயாளிகள் ஐந்து மணி நேரம் வரை நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இதனால் பெரும் அசௌகரியம் ஏற்படுகின்றது.
வைத்திய நிபுணர்களின் அறைகள் மற்றும் கீழ் தளத்தில் உள்ள கழிப்பறைகள் கடுமையான துர்நாற்றத்துடன் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகிறது.
நோயாளிகளைக் கையாள்வதில் கடுமையான மற்றும் காலாவதியான முறைகள் பயன்படுத்துவதோடு, வைத்தியசாலை ஊழியர்கள் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி நோயாளர்களை திட்டுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

மோசமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்
65 வயதுக்கு மேற்பட்ட வயதான நோயாளிகளைக் கூட உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முரட்டுத்தனமாகப் பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட காத்திருப்பு நேரம், மோசமான சுகாதாரம் மற்றும் மனிதாபிமானமற்ற சிகிச்சை குறித்து நோயாளிகளிடமிருந்து வரும் ஏராளமான புகார்களுக்கு வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள், ஊழியர்கள் அலட்சியம் செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் ஜெயருவன் பண்டார,அதிகரித்த நோயாளர்கள் காரணமாக கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார்.