கொழும்பில் ஆடை விற்பனை நிலையத்தில் ஊழியர்களின் அதிர்ச்சி செயல்
கொழும்பு, புறக்கோட்டை செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பணம் மற்றும் ஆடைகள் திருடப்பட்டுள்ளன.
இதனை திருடிய குற்றச்சாட்டில், அந்த விற்பனை நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் விற்பனை உதவியாளர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஊழியர்களின் அதிர்ச்சி செயல்
இவர்கள் குறித்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 62 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் ஆடைகளைத் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த முதலாம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தமது விற்பனை நிலையத்திலிருந்து 32 லட்சம் ரூபாய் பணமும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகத்திற்கிடமான முகாமையாளர் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்ய நடவடிக்கை
கொள்ளையடிக்கப்பட்ட 32 லட்சம் ரூபாய் பணத்தை முகாமையாளரின் மட்டக்குளிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
YOU MAY LIKE THIS VIDEO
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam