ஈரானுடனான போர் நிறுத்தம் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஈரானுடனான போர் நிறுத்தம் நீடிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது அறிவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, உலகப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவர, இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு தாக்குதல்களைத் தொடங்குவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்த போதிலும், பின்னர் அவர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுளளார்.
அதன்படி, ஈரானியத் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை, ஈரான் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan