கொழும்பில் விபத்துக்குள்ளான அரச பேருந்து
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று(03.06.2025) காலை 5.30 மணியளவில் மட்டக்குளி பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த கண்டிக்கு செல்லும் பேருந்தே கொழும்பு 15 பகுதியிலுள்ள பஞ்ஞானந்த வீதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த வீதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ளது.
ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, பேருந்தில் அதிகளவான பயணிகள் இல்லாததால் ஓட்டுனரை தவிர எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
காயமடைந்த ஓட்டுநர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ப்ளுமென்டல் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் பேருந்தினுடைய ரயரானது பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan