திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான்
கொழும்பு பிரதான நீதவான் திலிண கமகே, திடீரென்று மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே அண்மையில் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவானாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது சகோதரரும், முன்னாள் மஹரகம மாநகர சபை உறுப்பினருமான சலோச்சன கமகே அண்மையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடன் மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திடீரென்று இடமாற்றம்
அவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், திலிண கமகே தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்து வேறொரு நீதவான் முன்னிலையில் அவர்களை முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது திலிண கமகே கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் பதவியில் இருந்து மொரட்டுவை மாவட்ட நீதிபதி பதவிக்கு திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |