மலேசியாவிலிருந்து வந்த தொழிலதிபரிடம் சிக்கிய கோடி ரூபா பெறுமதியுடைய பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்,ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேக நபர் கொழும்பு, மருதானையில் வர்த்தக நிலையத்தினை நடத்தும் தொழிலதிபர் என்று கூறப்படுகின்றது.

இவர் மலேசியாவிலிருந்து 'குஷ்' போதைப்பொருளை வாங்கி, அங்கிருந்து சிங்கப்பூருக்கு, இன்று அதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் SQ-468 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் 3 பொதிகளில் 1.024 கிலோகிராம் 'குஷ்' போதைப்பொருளை தனது கைப்பையில் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரும், போதைப்பொருள் கையிருப்பும் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.