"புநக்கோட்டை" - கொழும்பு பேருந்து நிலைய பெயர்ப்பலகையில் எழுத்துப் பிழைகள்! எழுந்துள்ள கடும் விமர்சனங்கள்
அரச நிதியில் பல மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08-04-2026) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், அந்த மகிழ்ச்சியை விடவும் அங்கு வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பெயர்ப்பலகையில் காணப்பட்ட எழுத்துப் பிழைகள் பொதுமக்களிடையே பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
புதிதாக திறந்து வைக்கப்பட்ட பெயர்ப்பலகையில் சுமார் ஐந்து இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன,
"புறக்கோட்டை" என்பது "புநக்கோட்டை" என எழுதப்பட்டுள்ளது.
ஐந்து எழுத்துப் பிழைகள்
"கிளீன்" (Clean) என்ற சொல் "கீளீன்" என தவறாக பதியப்பட்டுள்ளது.

"ஒத்துழைப்பு" என்ற சொல்லில் "ழை" எழுத்து பிழையாக உள்ளது.
"தொழிநுட்பம்" என்ற சொல்லில் "ழி" என்ற எழுத்து இரண்டு இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"இன்று காலை முதல் பலரும் இந்தப் புனரமைப்புப் பணிகளைப் பாராட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், 12 மணித்தியாலங்கள் கடந்தும் இந்த மொழிச் சிதைவை எவரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையானது," என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் நரேந்திர மோடியின் வருகையின் போது வைக்கப்பட்ட பதாகைகள் முதல் இன்று வரை, அரச திணைக்களங்களில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், கொச்சைப்படுத்தப்படுவதும் ஒரு 'இயல்பான நிகழ்வாக' மாற்றப்பட்டு வருகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



