கொழும்பில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்து - பலர் பலி என தகவல் (VIDEO)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்று இரவு பேருந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்துள்ளது.

இந்த பேருந்து நானுஓயா குறுக்கு வீதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது, தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்றுடன் மோதியதுடன், அதற்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக, சிற்றூர்தியிலும், பேருந்திலும் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நானுஓயா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan