கொழும்பு ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்
கொழும்பு-ப்ளூமெண்டல் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
கொழும்பு புளூமெண்டல் தொடருந்து பாதையின் அருகே உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று(18) மாலை நடைபெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவரை எடுத்துச் சென்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சுகததாச விளையாட்டரங்கிற்கு அருகில் அவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்: அஸ்ரப் அலி







11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
