கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் - மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்துசேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக மட்டக்களப்பு தொடருந்து நிலைய பிரதான அதிபர் ஆ. பேரின்பராஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்றுமுதல் (19.10.2024) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
காட்டு யானைகள் கூட்டம் ஒன்று தொடருந்தில் மோதியதால் குறித்த பாதை சேதமடைந்திருந்தது.
பொது மக்களின் நலன்
இந்நிலையில், பொது மக்களின் நலன் கருதி புகையிரத திணைக்களத்தினால் சேதமடைந்த பாதைகள் துரிதமாக புணரமைக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழம காலை சேவைகள் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதபோன்று இரவு 8.15 க்கு புறப்பட உள்ள பாடுமின் தொடருந்தானது வழமை போல் இடம்பெற உள்ளத்துடன் முட்பதிவு ஆசனங்கள்
செய்தவர்கள் வழமை போல் தங்களது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும் எனவும், அதிகாலை
1.30 க்கு புறப்பட உள்ள புலத்திசி கடுகதி சேவை மற்றும் இதர சேவைகளும் வழமை
போல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18.10.2024) இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்தில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய விபத்தால் தொடருந்து பாதை கடுமையாக சேதமடைந்ததுடன், எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்திருந்ததுடன் இரண்டு காட்டு யானைகளும் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
