கொழும்பிலிருந்து போதைப் பொருள் கடத்திய 20 வயது இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
சிசிடிவி கேமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் நேற்று (26.03.2026) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலதிக தகவல் - சிஹான் பாரூக்
முதலாம் இணைப்பு
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் தனியார் பேருந்து வண்டியில் அனுப்பப்பட்ட சிசிடிவி கேமரா பொதியுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26.03.2026) இடம்பெற்றது.
மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கும் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் சிசிடிவி கேமரா பொதியொன்றை, தொலைபேசி மற்றும் பெறுநர் விவரங்களுடன் நடத்துனரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
20 வயது நபர் கைது
இந்த கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழு சம்பவ தினமான நேற்று(26) அதிகாலை 3 மணியளவில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்த போது, நடத்துனர் பொதியிலுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சிசிடிவி கேமராவை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தார்.
இதையடுத்து, பேருந்து நிலையத்தில் பொதியை எடுத்துக் கொண்ட நபரை மறைந்திருந்த பொலிஸார் சந்தேகநபராகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam