அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை உத்தரவு
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு இன்று(27/23/2026) பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைய அமைச்சர் குமார ஜயகொடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிணை உத்தரவு
இதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, தலா 1 ரூபா மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைகளின் கீழ் வெளிச்செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகைப் பதிவுகளையும் வரவழைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டில் உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக இலாபத்தையும் ஆதாயத்தையும் ஏற்படுத்தி, இலஞ்சச் சட்டத்தின் 70 (b) பிரிவின் கீழ் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி, எரிசக்தி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri