ட்ரம்பை கடுமையாக விமர்சித்த கொலம்பியா ஜனாதிபதி! அமெரிக்க அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோவின் விசாவை இரத்து செய்வதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
இந்தநிலையில், காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்பும் உடந்தையாக இருப்பதாக ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் குஸ்டாவோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசா இரத்து
இது குறித்து கொலம்பியா ஜனாதிபதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
இனிமேலும் ஐ.நா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
மற்றொரு பதிவில் டொனால்ட் ட்ரம்பை 'டொனால்டு டக்' என்று கூறி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ கிண்டல் அடித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
