கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து கையொப்பங்கள் பெறல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான கையொப்பங்களையும் பெற்று கொள்வதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் நோக்கம்..
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான விவசாயிகளை இலக்கு வைத்தும் குளத்துக்கு அப்பாற்பட்ட மானாவாரி செய்கை பயிர் மேற்கொள்ளும் விவசாயிகளையும் இலக்கு வைத்தும் மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் ஆலோசனைகளுக்கு அமையவே கையொப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிட்டு நேற்று முதல் கோரக்கன்கட்டு, சின்னக்காடு மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதி இடதுகரை மற்றும் வலதுகரை விவசாயிகளிடம் கடிதத் தலைப்பு கடிதத்தின் உள்ளடக்கம் உத்தியோகபூர்வ கையொப்பம் எதுவும் இன்றி வெற்று படிவம் ஒன்றில் கமக்கார அமைப்புகள் ஊடாக சிறுபோக பயிர்ச்செய்கைக்கான பதிவுகளை மேற்கொள்ளும் விவசாயிகளிடமிருந்து குறித்த படிவத்தில் கட்டாயப்படுத்தி கையொப்பங்கள் பெறும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட சில குறிப்பிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக் களத்தின் பிரதி யானையாளர் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான எந்த கையொப்பங்களையும் பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் கமக்கார அமைப்புக்களுக்கு தங்களால் வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் விவசாயிகள் தங்களுக்கு நேரடியாக முறைப்பாட்டை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த செயற்பாடானது தனிப்பட்ட காணிப்பினக்கு தொடர்பினை மூடி மறைக்கவும் சில அரசியல் நோக்கங்களுக்காகவும் குறிட்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையில் தங்களது அரசியல் நோக்கத்திற்காக கையொப்பம் பெறப்படுவதாக குறிப்பிடபடுகின்றது.

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri