யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொடூரம்! செய்திகளின் தொகுப்பு
யாழ். மாவட்டத்தின் நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாவற்குழி மேற்கிலுள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். திருடர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை உடைந்தது. 42 வயதான தாயின் தலை உடைந்தது அப்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 4 மணி வரை வீட்டில் தேடுதல் நடத்திய திருடர்கள், பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, அவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்த 2,500 ரூபா பணம், கைத்தொலைபேசியையே திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என பாதிக்கப்பட்வர்கள் கூறியதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,





கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan
