விவசாய ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டம்! வீழ்ச்சியடையும் விவசாயம்
விவசாய ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
விதை உற்பத்தி
விவசாய ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளால் விதை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரச கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாய ஆலோசகர்கள் கடந்த மே மாதம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறக்குமதி
நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விதைகள் தடைப்பட்டுள்ளதன் காரணமாகவும், விவசாய ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவும் எதிர்காலத்தில் நாட்டில் விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
