டொலர் பற்றாக்குறை காரணமாக ஹஜ் பயணத்தைக் கைவிட தீர்மானம்
டொலர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இவ்வருட ஹஜ் பயணத்தைக் கைவிட ஹஜ் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது.
ஹஜ் பயணத்துக்கான அனுமதி
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், இந்த வருடம் 1,585 ஹஜ் பயணிகளுக்கு இலங்கையில் இருந்து ஹஜ் பயணத்துக்கான அனுமதியை சவூதி அரேபியா வழங்கியுள்ளது.

குறித்த அளவிலான ஹஜ் பயணிகள் மக்கா சென்று திரும்ப சுமார் பத்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
டொலர் பற்றாக்குறை
நமது நாடு கடுமையான டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அந்தளவு டொலர்களை செலவிட முஸ்லிம்கள் விரும்பாத காரணத்தினால் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கைவிடப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா? Cineulagam
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam