கல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தில் கிளீன் சிறிலங்காவுக்கு இணைவான வேலைத் திட்டம்
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக பாடசாலை மட்டத்திலான வேலை திட்டம் நேற்று (09) நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது.
கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரது அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கிளீன் சிறிலங்கா விசேட செயற்திட்ட முன்னெடுப்பு கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஐயந்தலால் ரத்னசேகர ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசால் அறிவுறுத்தலுக்கு அமைவாக எம். எஸ். சஹூதுல் நஜீம் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமை இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலைத் திட்டம்
இந்த விசேட செயற்திட்டத்தின் போது நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்படுவதுடன் , மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பெற்றார், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினர் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு பாடசாலை சூழலையும், கட்டிடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








