பிரித்தானியாவை மீண்டும் உறையவைக்கும் பனிப்பொழிவு! விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலை ஏற்படவுள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
எச்சரிக்கை
இந்த எச்சரிக்கையை UK Health Security Agency (UKHSA) வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரை இந்த வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுத் வெஸ்ட், மிட்லாண்ட்ஸ், நார்த் ஈஸ்ட், நார்த் வெஸ்ட் மற்றும் யார்க்ஷைர் அண்ட் த ஹம்பர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
பிரித்தானியாவிற்கே பொதுவாக எச்சரிக்கை விடுக்கும் இந்த நிறுவனம், கடும் குளிர் நிலை “மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உயிருக்கு அதிக ஆபத்தை” உருவாக்கக்கூடும் என்றும், சுகாதார சேவைகளின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கடும் குளிர்
இதற்கிடையில், Met Office வேல்ஸ் மற்றும் மத்திய பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இடையூறு ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் நிலை (Yellow Warning) பனிப்பொழிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உயரமான பகுதிகளில் 2 செ.மீ முதல் 5 செ.மீ வரை பனி பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில், மாலை நேரம் முதல் அதிகாலை வரை குறைவான அளவு பனி பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், தென் பிரித்தானியாவின் சில பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பயண இடையூறு அபாயம் இருப்பதாகவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சவுத் வெஸ்ட் பகுதிகள் ஜனவரி மாதத்தில் “கொரெட்டி”, “இன்க்ரிட்”, “சந்திரா” என பெயரிடப்பட்ட மூன்று புயல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. அவை கடும் மழையை ஏற்படுத்தின.
வெள்ள அபாயம்
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அதிகளவு மழை பெய்துள்ளதால், அடுத்த சில மாதங்களிலும் வெள்ள அபாயம் நீடிக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UK Centre for Ecology and Hydrology (UKCEH) தகவலின்படி, ஜனவரி மாதத்தில் தென் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஆறுகள் மிகவும் அதிகமான நீர்மட்டத்தை எட்டியுள்ளன. சில இடங்களில் வரலாற்று சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் கடும் மழை காரணமாக மண் முழுமையாக நீரால் நிரம்பி (saturated) இருப்பதால், நீர் நிலத்தடி வழியாக மேலெழும் நிலையும் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், Environment Agency (EA) நிலத்தடி நீர் காரணமான வெள்ள அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் நீடிக்கக்கூடும் என்றும், இது பல மாதங்கள் தொடரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam