இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது மிகப்பெரிய திட்டம்! கோவை வெடிப்பு சம்பவ விவகாரத்தில் வெளியாகும் தகவல்
இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அஸாருதீன் கேரளாவில் ஐ.எஸ் அமைப்பின் அங்கத்தவரான மொஹமட் நௌஷான் என்பவருடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய புலனாய்வுச் சேவையான என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் 23ஆம் திகதி குண்டுவெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் மொஹமட் அஸாருதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கேரளா எர்னாகுளம் நீதிமன்றில் குறித்த மனுவை ஆட்சேபித்து காரணங்களை வெளியிட்ட போதே இந்திய தேசியப் புலனாய்வுச் சேவை இந்த விடயத்தை கூறியுள்ளது.
பெரிய தாக்குதல் திட்டம்
மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அஸாருதீன் கேரளாவில் ஐ.எஸ் அமைப்பின் அங்கத்தவரான மொஹமட் நௌஷான் என்பவருடன் கலந்துரையுள்ளார்.
இதன்போது, மொஹமட் அசாருதீன் ஒரு பெரிய தாக்குதல் திட்டத்தைப் பற்றி அவருடன் பேசியுள்ளார். அவர் சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்டோரின் அடிப்படைவாத கருத்துகள் அடங்கிய காணொளிகளை பகிர்ந்து வந்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவரும், தற்கொலை நடத்தியவருமான சஹ்ரான் ஹாசிம் தமிழகத்தில் ஜிஹாத்துடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக அவர் இந்தியாவுக்கு பயணித்து குறிப்பாக தமிழ் நாட்டில் ஏராளமான இந்திய முஸ்லிம்களை பயங்கரவாதத்தின் பக்கத்துக்கு ஈர்த்துள்ளார் எனவும் இந்திய புலனாய்வுச் சேவை குறிப்பிட்டுள்ளது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
