புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மீண்டும் சந்தையில்
புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிறுவனம் மீண்டும் அதே வர்த்தக பெயரில் தேங்காய் எண்ணெயை சந்தைக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கும் இன்னும் முடிவடையவில்லை.
இப்படியான நிலைமையில், அந்த நிறுவனம் எந்த அனுமதியின் கீழ் மீண்டும் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து, விநியோகம் செய்கிறது என்பது பிரச்சினைக்குரியது.
விஷத்தன்மையான இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத நிறுவனம் ஒன்றுக்கு நுகர்வோர் அதிகார சபை எப்படி இவ்வாறான அனுமதியை வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
