கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் வருமானம்
இலங்கையில் 2024 பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நேற்று (28.3.2024) தென்னை அபிவிருத்தி அதிகாரசபை (சி.டி.ஏ) வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி
2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 4,366 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ. 2,401 மில்லியன் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி மாதாந்த அடிப்படையில் வெளியிட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின்படி, 2024 பெப்ரவரியில் 6,739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் ரூ. 2,971 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டை விட 2024 பெப்ரவரியில் 2,373 மெட்ரிக் தொன்கள் அதிகரித்ததுடன், ஏற்றுமதி வருமானமும் ரூ. 570 மில்லியன் ஆக கூடியுள்ளது.
தேங்காய் ஏற்றுமதியின் வருமானம்
கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை ஒவ்வொரு மாதமும் தேங்காய் உற்பத்தி அதிகளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இலங்கையில் தேங்காய் உற்பத்தி 2023 நவம்பரில் 22 சதவீதமும், டிசம்பரில் 5 சதவீதமும், 2024 ஜனவரியில் 18 சதவீதமும், பெப்ரவரியில் 25 சதவீதமும் அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், தேங்காய்களின் மொத்த உற்பத்தி 3,000 மில்லியனைத் தாண்டும், மேலும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 1,380 மில்லியனாக இருக்கும்.
எவ்வாறாயினும், தேங்காய் ஏற்றுமதியின் வருமானம் இந்த வருடத்தில் முதன்முறையாக ஒரு பில்லியன் டொலர்களாக உயரும் என தென்னை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |