'கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு': கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
'கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு' என்ற தொனிப்பொருளின் கீழ் சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
உத்தேச கருத்திட்டம்
இந்த உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திலிருந்து தெஹிவல வரையான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் காலிமுகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீட்டர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
