கனடாவில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் வெளியேற்றப்பட்ட சம்பவம்! விளக்கம் கோரும் மாவை சேனாதிராஜா
கனடாவில் தமிழ்த் தேசியக்கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று முன்தினம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் யாரால், ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
கனடா கூட்டத்தில் இருந்து சுமந்திரன் தப்பியோடும் வீடியோ வெளியானது
சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்!பதற்றமான சூழல்
கனடாவில் நிலை குலைந்த சாணக்கியன் - சுமந்திரனுக்கு நடந்தது என்ன!
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri