நிலக்கரி இறக்குமதி ஊழல்கள் : விசாரணை கோரி சி.ஐ.டி.யிடம் ஜனாதிபதி செயலர் முறைப்பாடு
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட நிலக்கரி இறக்குமதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் இந்த முறைப்பாட்டை இன்று காலை சமர்ப்பித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
விசாரணை
நிலக்கரி கொள்வனவு மற்றும் இறக்குமதி நடைமுறைகளில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் ஊடாகக் கவலைகள் எழுப்பப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே, குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொள்முதல் நடைமுறைகள், விதிமுறை இணக்கப்பாடுகள் மற்றும் சாத்தியமான முறைகேடுகளை ஆராயும் வகையில் இந்த விசாரணை கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு முதல் 2025/26ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குட்பட்ட நிலக்கரி கொள்வனவுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அரசு நியமிக்கவுள்ளது என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri