அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ள திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமைக் காரியாலயம்
திருகோணமலை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையம் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பிரதான கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கடமையில் இருந்த பாதுகாப்பு காவலாளி பொது முகாமையாளருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து திருகோணமலை துறைமுக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள காணொளியை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டமை பற்றிய தகவல்கள் இன்னும் பெறப்படவில்லை எனவும், இன்றைய தினம் பொருட்களின் விபரங்கள் திரட்டப்பட உள்ளதாகவும் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.



பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
