கிளப் வசந்த கொலையின் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த வாழ்த்து செய்தி: சந்தேகநபர் வாக்குமூலம்

Colombo Dubai Sri Lanka Police Investigation Gun Shooting
By Dhayani Aug 30, 2024 12:56 AM GMT
Report

மாகந்துறை மதுஷின் ஏற்பாட்டில் டுபாயில் நடைபெற்ற விருந்துக்கு கிளப் வசந்தவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் அதனை தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு இரகசிய தகவல் வழங்கியமையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளப் வசந்த கொலை விவகாரம் தொடர்பில் பாணந்துறை பகுதியில் இருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தில் பேருந்து  தரிப்பிடத்திற்கு அருகில் இருவரும் தங்கியிருப்பதாக பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன் தினம் (28) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கனடாவுக்கான விசிட்டர் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு : குழப்பத்தில் தமிழர்கள்

கனடாவுக்கான விசிட்டர் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு : குழப்பத்தில் தமிழர்கள்

கிளப் வசந்த கொலையின் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த வாழ்த்து செய்தி: சந்தேகநபர் வாக்குமூலம் | Club Wasantha Murter Investigation

டுபாயில் திட்டம்

சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட தினத்தன்று, டுபாயில் உள்ள ஒருவரின் ஒருங்கிணைப்பின் பேரில், அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு தாங்கள் மற்றும் குழுவினர் வந்ததாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மறுநாள் காலை அந்த வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் கொல்லப்படவிருந்த நபரின் புகைப்படத்தை காண்பித்ததாகவும், அந்த புகைப்படத்தில் இருப்பவர் கிளப் வசந்த என தமக்கு அடையாளம் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

மேலும், கேபிஐ என குறிக்கப்பட்டிருந்த இரண்டு டி.56 துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றதாக சந்தேகநபர்கள்  தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஜூலை 8ம் திகதி காலை அத்துருகிரியில் உள்ள பச்சைக்குத்தும் நிலையத்திற்கு காரில் சென்று தோட்டாக்கள் தீரும் வரை கிளப் வசந்தவை சுட்டுவிட்டு, காரில் தப்பிச்சென்று அதனை நிறுத்திவிட்டு வானொன்றில் ஏறி கடவத்தைக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் மாத்தறைக்கு தப்பிச்சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இதன்போது மாத்தறையில் வைத்து இருவர் வந்து தம்மிடமிருந்த துப்பாக்கிகளை எடுத்துச்சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கதிர்காமம் பகுதியில் பதுங்கியிருந்த போது 'லொகு பட்டி' டுபாயில் இருந்து அழைப்பினை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்ததாகவும், கதிர்காமத்தில் வைத்து செய்திகளை பார்த்த போதே கொல்லப்பட்டவர் கிளப் வசந்த என்பது தெரியவந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கிளப் வசந்த கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

கிளப் வசந்த கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

கிளப் வசந்த கொலையின் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த வாழ்த்து செய்தி: சந்தேகநபர் வாக்குமூலம் | Club Wasantha Murter Investigation

அரசியல்வாதி அடைக்கலம்

இந்த கொலைக்காக சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தினை வழங்கி மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவின் வீட்டில் தங்குமாறு டுபாயில் இருந்து பணிப்புரைகள் கிடைத்ததாக அவர்கள் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த உத்தரவிற்கமைய 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்ததாகவும், அமல் சில்வா தனது பாவனைக்காக தொலைபேசியொன்றை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா, மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், 'ஜூட்' என்ற ஒருவர் தன்னை அழைத்து கஞ்சிபானை இம்ரான் இரண்டு பேரை அனுப்புவார் என்று கூறியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கிளப் வசந்த கொலையின் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த வாழ்த்து செய்தி: சந்தேகநபர் வாக்குமூலம் | Club Wasantha Murter Investigation

கொலைக்கான காரணம்

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விசாரணைகளின் பின்னர் கொலைக்கு முன்னர் அவர்கள் தங்கியிருந்த அத்துரகிரிய வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9mm கைத்துப்பாக்கி மற்றும் KPI என குறிப்பிடப்பட்ட T-56 தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்குப் பொறுப்பதிகாரி கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகின்றன.

கிளப் வசந்த கொலையின் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த வாழ்த்து செய்தி: சந்தேகநபர் வாக்குமூலம் | Club Wasantha Murter Investigation

இதேவேளை கடந்த 22ஆம் திகதி கிளப் வசந்தா படுகொலைச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டிருந்தார்.

மாகந்துறை மதுஷ் டுபாயில் நடைபெற்ற விருந்துக்கு கிளப் வசந்தவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் அங்கு செல்லவில்லை எனவும், அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இருந்து கடத்தப்பட்ட குடும்ப பெண் : 4 பேர் கைது

வவுனியாவில் இருந்து கடத்தப்பட்ட குடும்ப பெண் : 4 பேர் கைது

ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றங்களுக்கு முயற்சி

ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றங்களுக்கு முயற்சி


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US