ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றங்களுக்கு முயற்சி
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்கள் தொடர்பில் நாளுக்கு நாள் மாறுப்பட்ட கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், யார் வெற்றிப்பெறுவார்கள் என்பது அவர்களுக்கே சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் மிகச்சிறந்த உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையை கொண்ட அமெரிக்கா தனது அரசியல் இலாபத்திற்காக இலங்கையை முற்றுமுழுதாக தனது கண்காணிப்பில் வைத்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா தனது ஆதரவினை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கும் வகையில், அமெரிக்காவின் ஆதரவு தளம் ரணில் பக்கம் அதிகரித்து வருகின்றது.
மேலும், பிக்குமார்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு ஆதரவான ஒரு வேட்பாளரை விரும்பமாட்டார்கள் என்பதுடன், ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவில் ஆதரவினை வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர்.
தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், பிரித்தானியாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா பல விரிவான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக பகிர்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |