கிளப் வசந்த கொலை சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற 'கிளப் வசந்த' கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பச்சை குத்தல் நிலைய உரிமையாளர் உட்பட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய பகுதியில் கடந்த 8ஆம் திகதி பச்சைகுத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பாடகி கே. சுஜீவாவின் கணவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
தேடப்படும் மூவர் தொடர்பான தகவல்கள்
சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சந்தேகநபர்களின் 3 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |