மாகந்துர மதுஷின் சொத்துக்களை பெற திட்டமிடும் மூன்று குழுக்கள்!
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாகந்துர மதுஷின் சொத்துக்களுக்கு பேராசை கொண்டமையே கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைக்கு காரணம் என முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.
''மாகந்துர மதுஷ், கஞ்சபானை இம்ரான், கிளப் வசந்த ஆகிய மூவரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையானது பெரும் சொத்து குவிப்புக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை ஆகும்.
குழுக்களுக்கிடையிலான போட்டி
பொலிஸாரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மற்றும் ஊடகங்களில் நாம் காணும் தகவல்களின்படி. முக்கியமாக மூன்று குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த குழுக்களுக்கிடையிலான போட்டியே தாக்குதலாக மாறியுள்ளது.
இதில் தற்போது மதுஷின் அணிக்கு கஞ்சிபானை இம்ரான் தலைமை தாங்குகிறார்.
இதனால் மதுஷின் கொலைக்கு பின்னர் அவருடைய பணம் அனைத்தும் கிளப் வசந்தவின் கைகளுக்கு சென்றதாகவும் அதனை மீட்கவே இந்த தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் எனவும் விசாரணைகளின் மூலம் நம்பப்படுகிறது.'' என கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
