நாட்டின் பல இடங்களில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு! - பகுதியளவில் முடங்கியது இலங்கை
கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவு மீறல்கள் பல பகுதிகளில் பதிவாகியுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்று கூடல் அல்லது கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்கு உத்தரவின் போது, நாட்டின் சில பகுதிகளில் இரவு விடுதிகள் மற்றும் கடைகள் திறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டதால் நேற்றிரவு முதல் மாகாண எல்லைகளுக்கு இடையே போக்குவரத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், கோவிட் நிலவரத்தை கருத்தில் கொண்டு நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கடைகளை மூட தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதன்படி, கேகாலை, அம்பலங்கொட, படபொல, இரத்தினபுரி, அயகம, பண்டாரவளை, வலப்பனை, திருகோணமலை, மொனராகலை மற்றும் பிற நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் இன்று முதல் மூடப்பட்டிருந்தன.
இரத்தினபுரி, யட்டியந்தோட்டை, பதுளை, சிலாபம், பெலியத்த மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் நாளை முதல் மூட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தம்புள்ளையில் உள்ள அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening