இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறும் அறையொன்று தற்காலிகமாக மூடல்
கொரோனா வைரஸால் 14 பேர் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்ட பின்னர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறும் அறையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் ஒரு மருத்துவர், தாதிகள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமையை அடுத்து வைத்தியசாலையின் 24ஆவது நோயாளிகள் தங்கி சிகிச்சைப் பெறும் அறை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வைத்தியசாலையில் முதலில் மருத்துவர் ஒருவருக்கு நேற்று காலை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து 24ஆவது தங்கி சிகிச்சைப் பெறும் அறையில் பணியாற்றிய தாதிகள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் இரண்டு தாதியர்கள், இரண்டு சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஒன்பது நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களான பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்