மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பெண் நோயியல் வைத்திய பிரிவு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பெண் நோயியல் வைத்திய பிரிவு நேற்றையதினம் (24) பகல் வடமாகான ஆளுனரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பெண் நோயியல் வைத்திய பிரிவு
குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (24)வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.











திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
