காலநிலை தொடர்பில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், பொலநறுவை மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் அல்லது இரவில் இடியுடன் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதென திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையும் பெய்யும் போது வீசும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலிவயல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




