அடுத்த வாரம் வானிலையில் நிகழவுள்ள மாற்றங்கள்!
எதிர்வரும் 09.03.2025 முதல் 14.03.2025 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மார்ச் மாத மழை வீழ்ச்சியானது அயன இடை ஒருங்கல் வலய செயற்பாட்டினால் தூண்டப்பட்ட மேற்காவுகை (வெப்பச்சலனம்) செயன்முறை மூலம் கிடைப்பதனால் பரவலான இடி மின்னல் நிகழ்வுகளுடன் இணைந்ததாகவே இம்மழை கிடைக்கும்.
மழை பெய்ய வாய்ப்பு
எனவே மக்கள் குறித்த கால கட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் காலபோக நெல், சிறுதானியம் மற்றும் வெங்காயம், புகையிலை போன்ற பணப் பயிர்களின் அறுவடைக் காலமாக இது இருப்பதன் காரணமாக மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகளையும் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு திட்டமிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
