தொடரும் மழைவீழ்ச்சி! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
நாட்டின் வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
வட மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 50-55 வரையான கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri