நாட்டில் 2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதற்கமைய ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதேவேளை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்