"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் ஆரம்பம்
“க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் “அருணு தொர” தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(07.02.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9,300 புத்தகங்கள் பகிர்ந்தளிப்பு
இதன்போது, திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் நூலக வாகனங்கள் மற்றும் 9,300 புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், “க்ளீன் ஸ்ரீலங்கா” செயலகம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதுடன், மேல் மாகாண சபையின் உள்ளூராட்சி திணைக்களம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
இந்த நூலக வாகனங்கள் கெஸ்பேவ, சீதாவகாபுர ஆகிய நகர சபைகளுக்கும் ஹோமாகம, தொம்பே, அத்தனகல்ல, மினுவாங்கொடை, வத்தளை, புலத்சிங்கள, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச மட்டத்திலான வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், நூலக வசதிகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்வதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
10000 ரூபாவிற்கு மேல் பொருள் வாங்குவோருக்கு கிடைக்கவுள்ள நன்மை - இலங்கையில் அரசாங்கத்தின் புதிய திட்டம்








தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri