கிளீன் சிறீலங்கா விவகாரம் : கைவிடப்பட்ட தனியார் பேருந்து சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம்
கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சோதனை நடவடிக்கைக்கு எதிராக, தனியார் பேருந்து சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் எல்லை மீறி பேருந்துகளை சோதனையிடுவதாகவும், தேவையற்ற முறைகளில் செயற்படுவதாகவும் இதனால் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நேற்று (07) அறிவித்திருந்தது.
வேலைநிறுத்தப் போராட்டம்
இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று (08) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
