கிண்ணியாவில் நடைபெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலை திட்டம்
கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலை திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேசத்தை சுத்தப்படுத்தும் ஊர்வல நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊர்வலம் 'ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்' என்ற தொனிப் பொருளின் கீழ், கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து, பிரதான வீதி ஊடாகச் சென்று திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள சுகாதார ஊழியர் விடுதியை சென்றடைந்துள்ளது.
இதன் பின்னர், சுகாதார ஊழியர்கள் விடுதி அமைந்துள்ள வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்
கிண்ணியா தள வைத்தியசாலை, கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகம் ஆகியன இணைந்து, இந்த கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.எம். அஜித், கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.எம். அனீஸ், கிண்ணியா வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியச்சகர் ஹஸ்புல்லா ஹில்மி, பதில் சட்ட வைத்திய அதிகாரி எம். ஏ. எம். ஜிப்ரி, சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |