கொழும்பிலிருந்து யாழை நோக்கி புறப்பட்ட சிறப்பு தொடருந்து
கிளீன் சிறிலங்கா - சுத்தமான இலங்கை திட்டம் என்ற தொனிப்பொருளில் இன்று கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மக்களிடையே கிளீன் சிறிலங்கா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் 'கிளீன் சிறிலங்கா' செயலகம் இந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது.
முக்கிய திட்டம்
இந்த திட்டம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆரம்ப விழா இன்று 'கிளீன் சிறிலங்கா' செயலகத்தின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுவிஸ்வர தலைமையில் நடைபெற்றது.
கல்கிஸ்ஸயிலிருந்து புறப்பட்ட குறித்த தொடருந்து காலை 6:20 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைந்து. காலை 6:40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டது.
சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறை மாற்றம் மற்றும் தேசிய அளவிலான உறுதிமொழிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
