அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில், அந்த மாவட்டத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா , அஸ்ரப் தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பொறுப்பாளர் சம்சுல் அலி, நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.ஆரீப் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குப்பை கூழங்கள் அகற்றும் பணி
இதன்போது, ஏ.அதம்பாவாவினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கத்தையும் அவர் வழங்கியுள்ளார்.

இறுதியாக பாதைகள் மற்றும் வெற்று வளவுகளில் உள்ள குப்பை கூழங்கள் அகற்றும் பணியையும் அதிதிகள் தொடக்கி வைத்துள்ளனர்.
வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri