மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொழில்கல்வி நிறுவனங்கள் ஊடான வேலைத்திட்டங்கள்
கருத்திட்டத்தின் ஊடாக நாட்டினை சீரமைக்கின்ற அதேநேரம் இந்த நாட்டினை நேசிக்கின்ற சமூகத்தினை உருவாக்கும் பணியையும் முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வேலைத்திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்கல்வி நிலையங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இன்று முன்னெடுக்கப்படும் தொழில்சார் கல்வி பிரிவின் விதிமுறையான, கவர்ச்சிகரமான நிறுவனமுறைமையை கட்டியெழுப்புவதற்காக தேசிய ரீதியில் கிளீன் ஸ்ரீலங்கா மூலமாக தொழில்கல்வி நிறுவனங்கள் ஊடான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிளீன் ஸ்ரீலங்கா
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது திட்டமாக நாடளாவிய ரீதியில் உள்ள 311 உயர்கல்வி தொழில்கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் இன்று காலை 08 மணி தொடக்கம் 01.00 மணி வரையான ஊழிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நாவலடி சமுத்திர பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் பிரதி பணிப்பாளர் கே.அருள்சிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி ரிப்கா ஷபீன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றூடல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்ச்சியின் நோக்கம் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் புனரமைப்பு பணிகள் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிதிகளினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
