இந்திய திட்டத்தின் ஊழலை முதலில் சுத்தம் செய்யுங்கள்: அரசாங்கத்துக்கு முன்னாள் எம்.பி சவால்!
அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
300 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் உள்ள மோசடி, ஊழல், முறைகேடுகள் போன்றவற்றை கவனத்தில்கொள்ள எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ அரசாங்கத்தின் பல்வேறு விடயங்களில் சேறு பூசி நிகழ்ச்சி நடத்துவதை விடுத்து, ஒவ்வொரு நடவடிக்கையையும் விரிவாக நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் .
முழு அதிகாரம்
அதற்கான முழு அதிகாரத்தையும் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நாடாளுமன்றத்தை மக்கள் வழங்கியிருப்பதால் எந்தவொரு சட்டத்தையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு இருக்கின்றது.
இதனடிப்படையில் முதலில் இலங்கையை இந்தியாவிடருந்து, சுத்தமாக்கி காட்டுமாறு அவரசாங்கத்துக்ளு சவால் விடுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        